தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“ம்ம்.. சாப்பிட்டேன்.. தண்ணீ குடிச்சுட்டேன்.. தலையை அசைத்து மருத்துவருக்கு பதிலளித்த திருச்செந்தூர் தெய்வானை யானை! - THIRUCHENDUR DEIVANAI ELEPHANT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானையான தெய்வானை உதவி பாகனை தாக்கியதில் அவர் உயிரிழந்ததையடுத்து இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தது, இந்நிலையில் இன்று மருத்துவருக்கு தலையசைத்து பதிலளித்துள்ளது.

திருச்செந்தூர் யானை தெய்வானை
திருச்செந்தூர் யானை தெய்வானை (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 5:21 PM IST

தூத்துக்குடி:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் யானையான தெய்வானை கடந்த 18ஆம் தேதி தாக்கியதில் யானைப் பாகன் உதயகுமார் (45) மற்றும் கோயிலுக்கு வந்த பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான சிசுபாலன் (59) ஆகிய இருவரை தாக்கியதில், அவர்கள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெய்வானை யானையின் உதவி பாகன் உதயகுமார் உயிரிழந்ததால் யானை தெய்வானை சோகத்துடன் சரிவர உணவு அருந்தாமல் இருந்து வந்தது. இதனால் இரண்டு கால்நடை மருத்துவர்கள் 24 மணி நேரமும் யானையை கண்காணித்து வந்தனர்.

திருச்செந்தூர் யானை தெய்வானை (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:பாகன் உயிரிழப்பால் உணவு உண்ண மறுக்கும் திருச்செந்தூர் தெய்வானை யானை!

இந்நிலையில், இன்று யானையை உதவி பகவன் செந்தில் வழக்கம் போல் குளிப்பாட்டி அலங்கரித்தார். பின் யானைக்கு வழக்கமாக கொடுக்கப்படும் உணவை வழங்கினார். இதையடுத்து நெல்லை வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் யானை தெய்வானையிடம் சாப்பிட்டியா? தண்ணீர் குடித்தாயா? எனக் கேட்டார். அதற்கு அழகாக தலையசைத்து தெய்வானை பதில் அளிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details