தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்..! - முருகன் கோயில் திருவிழா

Thiruchendur Murugan Temple: உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி மாத திருவிழா இன்று (பிப்.14) கொடியேற்றத்துடன் கோலாகலாமாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்துடன் துவங்கியது செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா
கொடியேற்றத்துடன் துவங்கியது செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 12:50 PM IST

கொடியேற்றத்துடன் துவங்கியது செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா

திருச்செந்தூர்: தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா இன்று (பிப்.14) கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, கோவில் நடை அதிகாலை 1 மணி அளவில் திறக்கப்பட்டு, 1:30 மணி அளவில் விஸ்வரூப பாரதனையும், 2 மணி அளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்தில், அதிகாலை 4 .52 மணிக்கு திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. அதன் பின்னர் கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகளும் நடைபெற்றது.

இதில் பங்கேற்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில், நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.

இதையும் படிங்க:திருச்சி இனாம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்!

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான 7ஆம் திருநாள் அன்று சிவப்புச் சாத்தியும், 8ஆம் திருநாள் அன்று பச்சை சாத்தி சப்பரத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம், 10ஆம் திருநாள் அன்று, அதாவது 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக, கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டும் போது, கோயில் இணை ஆணையர் வருகைக்காக 10 நிமிடத்திற்கும் மேலாக அர்ச்சகர்கள் காத்திருந்தனர். இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நல்ல நேரம் முடிவதற்குள் கொடியேற்றப்பட வேண்டும் பக்தர்களுள் சிலர் அர்ச்சகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படிங்க:நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா; காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details