தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் உண்டியல் சீல் உடைப்பு! 1908 கிராம் தங்கம்; சுமார் 4 கோடி ரூபாய் பணம்? - THIRUCHENDUR MURUGAN TEMPLE HUNDI

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் காணிக்கையாக மூன்று கோடியே 76 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக அறக்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் கோவில், உண்டியலில் கிடைத்ததை எடுத்துச் செல்லும் பணியாளர்கள்
திருச்செந்தூர் கோவில், உண்டியலில் கிடைத்ததை எடுத்துச் செல்லும் பணியாளர்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 9:31 AM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் 3 கோடியே 76 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. எந்த மாதமும் இல்லாத அளவுக்கு 1,234 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது. இந்த பணி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

உண்டியல் காணிக்கை

இதை எண்ணுவதற்காக கோவிலில் உள்ள வசந்த மண்டபத்திற்கு காணிக்கைகள் மொத்தமாகக் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் 3 கோடியே 76 லட்சத்து 38 ஆயிரத்து 927 ரூபாய் (ரூ. 3,78,38,927) உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

மேலும் 1,908 கிராம் தங்க பொருட்களும், 21 ஆயிரத்து 100 கிராம் வெள்ளியும், 26 ஆயிரத்து 100 கிராம் பித்தளையும் உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கரன்சிகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் கிடைத்த வெளிநாட்டுப் பணம் (ETV Bharat Tamil Nadu)

இதில் எந்த மாதமும் இல்லாத அளவுக்கு, இம்மாதம் வெளிநாட்டு கரன்சிகள் அதிக அளவில் காணிக்கையாக கிடைத்துள்ளது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும், அதே போல் அரபு நாடுகளான சவூதி மற்றும் குவைத் நாடுகளைச் சேர்ந்த கரன்சிகள் உண்டியலில் வருவாயாக கிடைத்துள்ளது.

இதையும் படிங்க
  1. குலசை அம்மனுக்கு சுமார் அரை கோடி ரூபாய் வருவாய்!
  2. ஒரு நாள் சஷ்டி விரதம் இருக்கும் முறையின் முழு விவரம்..தானம் கொடுப்பது முக்கியம்!
  3. சஷ்டி விரதத்தை முறையாக முடிப்பது எப்படி? இந்த 3 விஷயங்கள் ரொம்ப முக்கியம்..மறந்துடாதீங்க!

மொத்தமாக 1,234 வெளிநாட்டு கரன்சிகள் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த மாதம் 2-ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் கோவில் ஊழியர்கள் (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து 7 நாட்கள் நடந்த இந்த விழாவில் முருகன் மீது பாசமும், பற்றும், அன்பும் கொண்டு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தமிழ் பக்தர்கள், வருகை தந்திருந்தனர். அவர்கள் தங்களது நாடுகளைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகளை உண்டியலில் செலுத்தியுள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிடைத்த புழக்கத்தில் இல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் (ETV Bharat Tamil Nadu)

இது தவிர இந்தியாவில் செல்லாது என்று அறிவித்த பழைய 500, 1000, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் உண்டியல் காணிக்கைகளுக்கு இடையில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details