தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் பி.மூர்த்தி மீது பாமக நிர்வாகிகள் போலீசில் புகார்.. காரணம் என்ன? - PMK Complaint Against P Moorthy - PMK COMPLAINT AGAINST P MOORTHY

PMK Filed a Complaint against Minister P.Moorthy: பாமக சட்டமன்ற உறுப்பினரை தொலைபேசியில் தரக்குறைவாகப் பேசியதாக, அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தேனி மாவட்ட பாமக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

PMK Filed A Complaint Against Minister Moorthy
PMK Filed A Complaint Against Minister Moorthy

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 7:13 PM IST

தேனி: பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவை கொறடாவாக பதவி வகித்து வரும் இரா.அருள், மக்கள் பிரச்னை தொடர்பாக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியை தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொண்டு பேசியதாகவும், அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினரான அருளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும் தேனி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக, பெரியகுளம் நகரச் செயலாளர் முத்தையா தலைமையிலான பாமக நிர்வாகிகள், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரியகுளம் டிஎஸ்பி சூரக்குமரனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details