தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 4:52 PM IST

ETV Bharat / state

“உங்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால்..” தூய்மைப் பணியாளர்களிடம் தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வாக்குவாதம்!

Devadanapatti Panchayat Vice President: தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் குடிநீர் வசதி செய்து தரக் கூறி, பேரூராட்சி அலுவலகத்தில் முறையிடச் சென்ற தூய்மைப் பணியாளர்களுக்கு, பேரூராட்சி துணைத் தலைவர் மிரட்டல் விடுத்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Devadanapatti Panchayat Vice President
குடிநீர் வசதி கோரிய தூய்மைப் பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த பேரூராட்சி துணைத் தலைவர்

குடிநீர் வசதி கோரிய தூய்மைப் பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த பேரூராட்சி துணைத் தலைவர்

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் நிபந்தன். இவர் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில், அவரது ஒன்பதாவது வார்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பதற்காக, பேரூராட்சி சார்பில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் சாலைப் பணிகள் மேற்கொள்வதற்காக பணிகள் நடைபெற்ற பொழுது, குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தூய்மைப் பணியாளர்கள் குடியிருக்கும் பகுதிக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், குடிநீர் வழங்கிடக் கோரி தூய்மைப் பணியாளர்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிடுவதற்காகச் சென்ற பொழுது, தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக உள்ள நிபந்தன், தன்னிடம் முறையிட வந்த தூய்மைப் பணியாளர்களிடம் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், தூய்மைப் பணியாளர்களிடம் பேரூராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் நிபந்தன், "கலெக்டர பாரு, ஸ்டாலினை பாரு நீங்க யார வேணாலும் பாருங்க, நாங்க நினைத்தால் நோட்டீஸ் கொடுத்து எல்லாத்தையும் வெளியேற்றுவேன். உங்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், என் திமிரை நான் காட்டுவேன், கோட்டர்ஸ்ல தூய்மைப் பணியாளர்களை தவிர்த்துக் குடியிருக்கும் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவேன்" என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாது," நீ சட்டம் பேசினால் நானும் சட்டம் பேசுவேன். கோட்டர்ஸ்ல குடியிருந்திருவியா? போராட்டம் பண்ணி ஒன்னும் நடக்காது. நீங்கள் குடியிருப்பது குளத்துல, எல்லாத்தையும் வெளியேற்றுவேன்” என திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபந்தன், தூய்மைப் பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details