தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1.37 கோடியை அபேஸ் செய்த கும்பல்! - Government Job Fraud case

Fraud Government Job Order Case: அரசு வேலை வாங்கித் தருவதாக பல்வேறு நபர்களிடம் 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஒருவரை கைது செய்த நிலையில் மற்ற இரண்டு நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாலமுருகன்
பாலமுருகன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 11:00 PM IST

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரகாஷ் நடத்துனராக பணியாற்றி வந்த பேருந்தில் கொடுவிலார்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

அப்போது தனக்கும், ஆண்டிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரகுமார் ஆகியோருக்கு முக்கிய அரசியல்வாதிகளுடனும், நீதிமன்றத்தில் உயர் அதிகாரிகளுடன், பழக்கம் இருப்பதாக கூறி, 6 லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய பிரகாஷ் தனது உறவினரான முத்துக்குமார் என்பவருக்கு, அரசு வேலைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மகாலட்சுமி மற்றும் நாகேந்திர குமாரிடம் 6 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். மேலும் பல்வேறு தேதிகளில் இவர்கள் ஏழு நபர்களிடம், சுமார் 48 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று, போலி அரசு பணி ஆணையினை வழங்கியுள்ளனர்.

இதே போல் அல்லிநகரத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் 7 நபர்களிடம் பல்வேறு தேதிகளில் நாகேந்திர குமார் 41,50,000 ரூபாய் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி ஆணையை கொடுத்துள்ளார். இந்நிலையில் பணி ஆணை போலி என்பதை அறிந்த பிரகாஷ், தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் 7 நபர்களிடம் சேர்ந்து சுமார் 48 லட்சம் பணத்தை மகாலட்சுமி மற்றும் பாலமுருகன் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல் பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார், கொடுவிலார்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி, ஆண்டிபட்டியை சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சுமார் ஒரு கோடி 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்து, வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பணத்தை இழந்த பிரகாஷ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். அதன் பெயரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இது குறித்த மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து, மற்ற இரண்டு நபர்களை தேடி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பல்வேறு நபர்களிடம் ஒரு கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details