சென்னை:பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வி.டி.ராஜசேகர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளருமான வி.டி. ராஜசேகர், தலித் வாய்ஸ் என்ற பத்திரிகையை ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக நடத்தி வந்தார். 93 வயதான அவர் அண்மைகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வி.டி. ராஜசேகர், கர்நாடக பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆக இருந்தவர், இந்திய சீன நட்புறவுக் கழக அமைப்பாளர், பெங்களூரூ துளு கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். வி.டி.ராஜசேகர் மறைவுக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். வி.டி. ராஜசேகரின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான ஒந்திபெட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.