சென்னை:தீபாவளிப் பண்டிகை வரும் அக்.31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமையை ஈடுசெய்யும் விடுப்பாக வழங்கக் கோரி தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில் முதமைச்ச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், "தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் பெரும்பான்மையோர் தீபாவளிப் பண்டிகையினை தங்களது குடும்பத்தோடு சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், மறுநாள் (நவ.1) வெள்ளிக்கிழமை வெளியூர்களுக்குச் சென்ற பணியாளர்கள் பணிக்குத் திரும்பி வருவதில் சிரமம் உள்ளதோடு, குடும்பத்தோடு மனமகிழ்வோடு தீபாவளித் திருநாளைக் கொண்டாடிய உற்சாகம் இருக்காது.
இதையும் படிங்க: தீபாவளி நேரத்தில் இதை மறந்துடாதீங்க.. திருச்சி போலீஸ் தீவிரம்!
தங்களது பண்டிகையினை சொந்த ஊரில் கொண்டாடும் குடும்பத்தினருடன் தீபாவளிப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, நவ.1 வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் அரசு ஈடுசெய்யும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கவும், இதனை ஈடு செய்யும் விதமாக 09.11.2024 அன்று பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்