தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தமிழ்த்தாய் வாழ்த்து சரியா பாடுனா பெட்ரோல் இலவசம்” - தஞ்சையில் தமிழ் வளர்க்கும் தொண்டு நிறுவனம்!

தஞ்சவூரில் ஹெல்மெட் அணிந்து வந்து பிழையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து மூலம் தமிழ் வளர்க்கும் தனியார் தொண்டு நிறுவனம்
தமிழ்த்தாய் வாழ்த்து மூலம் தமிழ் வளர்க்கும் தனியார் தொண்டு நிறுவனம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 7:40 PM IST

தஞ்சாவூர்:தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் தஞ்சையில் ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நூதண விழிப்புணர்வு போட்டியை அறிவித்ததள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் 2 லிட்டர் பெட்ரோல் பரிசு: இந்த போட்டிப்படி தஞ்சையில் ஒரு பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் அணிந்து வரக்கூடிய நபர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையின்றி பாடினால் இரண்டு லிட்டர் பெட்ரோலை தனியார் தொண்டு நிறுவனம் இலவசம் வழங்கி பரிசளித்தது. இதில் மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:திருக்குறள் சொன்னா சர்பத் இலவசம்! பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும் ஜூஸ் கடை!

ஆர்வத்துடன் கலந்து கொண்ட மக்கள்:மேலும் பலர் இந்த போட்டியில் கலந்து கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பிழையின்றி பாடி இரண்டு லிட்டர் பெட்ரோலை தங்களது வண்டியில் நிரப்பிச் சென்றனர். அதேபோல் இந்த போட்டியில் பலர் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடி மீண்டும் மனப்பாடம் செய்து சரியாக பாடி பரிசு பெற்றனர். இதில் 25 நபர்கள் சரியாக பாடி தலா 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று சென்றனர். இந்த போட்டியின் போது தொண்டு நிறுவன நிர்வாகிகள் பிரபுராஜ்குமார், ஞானசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரபுராஜ்குமார், “ இந்த போட்டி மூலம் அனைவரும் தமிழ்தாய் வாழ்த்தை சரியாக பாடுகின்றனரா என்பதை ஆராய்ந்தோம். சிலர் வாழ்த்து பாடலை தவறாக பாடினர். ஆனால் பலர் சரியாக பாடினர். இதில் 25 நபர்கள் சரியாக பாடி இலவசமாக 2 லிட்டர் பெட்ரோலை பெற்றுள்ளனர்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details