ETV Bharat / lifestyle

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'மருந்து குழம்பு'..இந்த மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பை செய்ய தேவையான மூலிகைகள் என்ன? சுலபமாக மருந்து குழம்பு செய்வது எப்படி? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 2 hours ago

குளிர்காலம் வந்துவிட்டால், சளி இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளும் அழையா விருந்தாளியாக வந்து விடுகின்றன. இந்த மாதிரியான காலங்களில், கை மருந்துகள் எடுத்துக்கொள்ளாத சூழலில் அதை உணவாக்கி சாப்பிடும் பழக்கத்தை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அதில் ஒன்று தான் இந்த 'மருந்து குழம்பு'.

மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் மூலிகைகளை பயன்படுத்தி செய்யும் மருந்து குழம்பு, உடலில் நோய்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும். மழைக்காலம் மட்டுமின்றி பருவநிலை மாற்றம் ஏற்படும் போது, இந்த மருந்து குழம்பு உண்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி வலுபெற்று ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

மருந்து மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:

  • சுக்கு - விரல் நீளத் துண்டு
  • கண்டதிப்பிலி - 2 சிறிய குச்சி
  • வால் மிளகு - அரை டீஸ்பூன்
  • மிளகு - 3 டீஸ்பூன்
  • சீரகம் - 2 டீஸ்பூன்
  • ஓமம் - 1 டீஸ்பூன்
  • அரிசி திப்பிலி - சிறிதளவு
  • வெந்தயம் - அரை டீஸ்பூன்
  • தனியா - 3 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 4

குழம்பிற்கு தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டு - 15
  • தக்காளி - 2
  • புளி - 1 நெல்லிக்காய் அளவு
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

மருந்து குழம்பு செய்முறை:

  • முதலில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் மசாலா அரைக்க குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கை விடாமல் வறுக்கவும்.
  • அனைத்து பொருட்களும் நன்றாக பொரிந்து வந்ததும், அடுப்பை அணைத்து தனி தட்டிற்கு மாற்றவும். வறுத்து வைத்த பொருட்களில் சூடு ஆறியதும் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து,நைசாக அரைத்து சலித்து வைக்கவும்.
  • இப்போது, அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்க்கவும். அடுத்ததாக, வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின், நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை வதக்கவும். அடுத்ததாக, கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடுங்கள். (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்) குழம்பு நன்கு கொதித்து வந்ததும், அரைத்து வைத்துள்ள மருந்து பொடியை சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்தால் மருந்து குழம்பு தயார்.

குறிப்பு:

  1. மருந்து குழம்பில் உள்ள மூலிகைகள் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும் என்பதால், குழம்பிற்கு கட்டாயமாக நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்துங்கள்.
  2. இந்த மூலிகை பொடியை அரைத்து காற்று புகாத டப்பாவில் வைத்து விட்டால் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  3. இந்த குழம்பை வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை, அதுவும் ஒரு வேளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்த குழம்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.