தஞ்சாவூர்:தஞ்சாவூரில் வேலை முடிந்து சரக்கு வாகனத்தில் வீடு திரும்பிய 30 விவசாயிகள், வாகன டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளிகள்வர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி பகுதியில் விவசாய பணிகளுக்காக நேற்று (நவம்பர்.26) காலை சென்றுள்ளனர். விவசாய பணிகளை முடித்து விட்டு மாலை சரக்கு வாகனம் மூலம் மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது சரக்கு வாகனம் அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வாகனத்தின் டயர் திடீரென வெடித்துள்ளது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.