தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி (28). இவரது கணவர் கோவிந்தராஜ் இறந்து விட்டதால் இவரது பெயரில் உள்ள இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய பதிவு செய்துவிட்டு கொல்லாங்கரை விஏஓ வள்ளியை அணுகியுள்ளார்.
ஆனால் அவர் சரியான பதில் கூறாமல் ஒரு மாதமாக சுகந்தியை விஏஓ அலுவலகத்திற்கு வரச் சொல்லி அலைக்கழித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம்(செப்.30) விஏஓ அலுவலகம் சென்ற சுகந்தி பட்டா எப்போது கிடைக்கும் என்று அங்கிருந்த விஏஓ வள்ளியிடம் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க:வக்ஃபு திருத்தச் சட்டம் மூலம் முஸ்லிம்களின் சொத்துக்களை திருட முயற்சிப்பதா? ”- ஹைதர் அலி ஆவேசம்!
அதற்கு பட்டா மாற்றம் செய்ய ரூபாய் 3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகந்தி தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் 2 ஆயிரத்துடன் நேற்று கொல்லாங்கரை விஏஓ அலுவலகம் சென்ற சுகந்தி விஏஓ வள்ளியிடம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சரவணன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விஏஓ வள்ளியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்