தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரத்துக்கு மரம் பறக்கும் மர அணில்.. காடுகளின் பெருக்கத்துக்கு இதன் பங்கு என்ன? - Tree SQUIRRELS - TREE SQUIRRELS

Flying squirrels: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பறக்கும் மர அணில்கள் அதிகரித்து வரும் நிலையில் மர அணில்கள் வாழ்வாதாரம் குறித்து தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஸ் நிர்மல் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

பறக்கும் மர அணில்கள்
பறக்கும் மர அணில்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 8:56 PM IST

ஈரோடு:தென்னிந்தியாவில் உள்ள புலிகள் காப்பகத்தில் முக்கியமானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். 1,455 சதுர கி.மீ தூரம் கொண்ட புலிகள் காப்பகம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை 22ஆக இருந்த நிலையில் 2024ஆம் ஆண்டு 110-ஐ தாண்டிவிட்டது.

தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஸ் வெளியிட்டுள்ள வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, தலமலை, ஜெகலட்டி, தெங்குமரஹடா, கேர்மாளம் ஆகிய வனத்தில் மனித இடையூறு இல்லாத காரணத்தாலும், நீர்நிலைகளைக் கொண்டுள்ளதாலும் வன உயிர்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது வனப்பகுதியில் மழை பெய்து வனம் செழிப்பாக உள்ளது. குளம், குட்டைகள் நிரம்பி வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.

அனைத்து பல்லூயிர் பெருக்கம் காரணமாக, அரிய வகை விலங்குகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தென்படுகின்றன. இதில் குறிப்பிடும்படியாக பறக்கும் அணிகள் எனப்படும் மரஅணில்கள் காணப்படுகிறது. உலகத்தில் 280 வகையான அணில்கள் உள்ள நிலையில், இந்தியாவில் 40 வகையான அணில்கள் உள்ளது.

மர அணில்கள் என்ன செய்யும்?சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை, புள்ளி மான், கழுதைபுலி உள்ளிட்ட வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. வனத்தின் நடுவே சிறு நீரோடைகள் பயணிப்பதால், இங்கு ஆயிரக்கணக்கான சிறிய உயிரினங்களும் வசிக்கின்றன. அண்மைக்காலமாக ஆசனூர் வனத்தில் அதிகமான மர அணில்கள் திரிவதை காண முடிகிறது.

இந்தியாவில் 40 வகையான அணில்கள் இருந்த போதிலும், தமிழகத்தில் சாம்பல்நிற அணிலுக்கு அடுத்தபடியாக மரஅணில்கள் உள்ளது. செழிப்பாக உள்ள வனத்தில் வாழும் மரஅணில்கள் மரம் விட்டு மரம் தாவுவதால் பறக்கும் அணில் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு அடி நீளமுள்ள செந்நிற மரஅணில் பழம், விதைகள் சாப்பிடும்போது விழும் விதைகளால் செடிகள் முளைக்கின்றன.

காடுகள் பெருக்கத்துக்கு மர அணில்களின் பங்கு அதிகளவில் உள்ளது. மரஅணில்களை சிறுத்தை வேட்டையாடுதால் சிறுத்தைக்கு பயந்து அடிக்கடி மரம் தாவி மரக்கிளைகளில் பதுங்கிக் கொள்ளும் என மரஅணில்கள் குறித்து தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஸ் நிர்மல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதகையில் கனமழை; ராட்சத மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு! - OOTY RAIN

ABOUT THE AUTHOR

...view details