தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் டெட் தேர்ச்சி பெற்றவர்கள் திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! - TET Teachers Siege In Dmk Office - TET TEACHERS SIEGE IN DMK OFFICE

TET Teachers Siege in DMK Office: தமிழ்நாட்டில் டெட் தேர்ச்சி பெற்றவர்கள் திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு, அரசாணை 149ஐ ரத்து செய்து, திமுக தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு எண் 177ஐ நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

TET Teachers Siege In Dmk Office
TET Teachers Siege In Dmk Office

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 6:58 PM IST

Updated : Apr 9, 2024, 7:44 PM IST

TET Teachers Siege in DMK Office

சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், திமுகவின் தேர்தல் அறிவிப்பு எண் 177ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் திமுக கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதி எண் 177ஐ மறந்த திமுகவிற்கு எங்கள் குடும்ப ஓட்டும், எங்களது உறவினர்கள் ஓட்டும் இல்லை என எழுதி வீடுகளில் ஒட்டி உள்ளனர்.

இது குறித்து டெட் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதாவது, “கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தினர், பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, மீண்டும் போட்டித் தேர்வு எழுத வேண்டும் என அதிமுக காலத்தில் போடப்பட்ட அரசாணை 149ஐ ரத்து செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து போராடினர்.

கடந்த 2018ஆம் ஆண்டு மீண்டும் அரசாணை 149ஐ அதிமுக அரசு பிறப்பித்தது. ஏற்கனவே டெட் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற, மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்பட்டது.

இந்நிலையில், அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசாணை 149ஐ இருள் சூழ்ந்த அரசாணை என்று வன்மையாக கண்டித்து, திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த அரசாணை நீக்கப்படும் என்றும், கடந்த 2013ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும், திமுக தேர்தல் வாக்குறுதியிலும் இடம் பெறச் செய்தார்.

திமுக ஆட்சி அமைந்த பின்னரும் அதனை நீக்கவில்லை என்பதை நினைவுப்படுத்தும் வகையில், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால், திமுக தேர்தல் வாக்குறுதி 177ஐ காற்றில் பறக்கவிட்டு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என அறிவிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கும் போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் வாக்கு கேட்டு வர வேண்டாம் எனவும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக ஆட்சி அமைந்தால் போட்டித் தேர்வு அரசாணை 149ஐ ரத்து செய்யப்படும் என நம்பி வாக்கு சேகரித்தோம்.

நாங்களும், குடும்பத்தினரும், உறவினர்களும் திமுகவிற்கு வாக்கு அளித்ததுடன் தீவிரமாகவும் ஓட்டுக்கேட்டோம். ஆனால் எங்களின் காோிக்கையை திமுக நிறைவேற்றவில்லை. எனவே திமுகவின் நாடளுமன்றத் தேர்தல் பணிக்குழு அலுவலகங்களுக்குச் சென்று எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என கேட்கிறோம். மேலும் அதனை நிறைவேற்றாவிட்டால் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என டெட் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நயினார் நாகேந்திரன் வாகனத்தில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படையினர்! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 9, 2024, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details