தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்த வெளியப்பன் (அதிமுக பிரமுகர் ) வழக்கம்போல நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகொலை செய்யப்பட்டவரது மனைவி மாரிச்செல்வி மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது ஆக்ரோஷ தாக்குதல்; ஏழு பேர் கைது - ஒருவர் தப்பியோட்டம்!
இந்த படுகொலையானது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலின் காரணமாக முன் விரோதத்தால் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் பாலமுருகன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.