தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சந்தா கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். அதே பகுதியில் உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர், தன்னுடைய இடம் பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரை நாடியுள்ளார்.
ஆனால், கிராம நிர்வாக அலுவலர், கருப்பசாமியிடம் பல்வேறு காரணங்களை சொல்லி பட்டாவை மாற்றி தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு மாதங்களாக கருப்பசாமியை பட்டா மாறுதலுக்காக அலைக்கழித்த நிலையில், 13 ஆயிரம் ரூபாய் லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலடைந்த கருப்பசாமி, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், 3 தினங்களாக விசாரணை நடத்திய லட்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய 13 ஆயிரம் ரூபாய் பணத்தை கருப்பசாமியிடம் கொடுத்து, அதனை விஜயகுமாரிடம் வழங்க சொல்லி பின் தொடர்ந்துள்ளனர்.