தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாணவி இன்பா. இவர் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், செங்கோட்டை அரசு நூலகத்தில் படித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
தற்போது, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து தென்காசி மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ள மாணவி இன்பாவிற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடுத்தர குடும்பத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வை எழுதி வெற்றி பெற்ற இன்பாவை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.