தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் 10 வயது சிறுவன் மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை! - School boy died in Cuddalore - SCHOOL BOY DIED IN CUDDALORE

பண்ருட்டி அருகே பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த 10 வயது பள்ளி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 9:59 AM IST

கடலூர்: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் புவனேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி ஜனார்த்தனன்(10) என்ற மகன் உள்ளார். சரவணன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால், ஜனார்த்தனன் பாலூர் கிராமத்தில் உள்ள அவருடைய பாட்டி ஆனந்தாயி வீட்டில் தங்கி 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று (அக்.4) ஜனார்த்தனன் பாட்டியின் பக்கத்து வீட்டிலுள்ள உறவினரான நாகசாமி, ஷோபனா என்பவருடைய வீட்டில் உள்ள சோபாவில் உட்கார்ந்தவாறு, கழுத்தில் சேலையைச் சுற்றியபடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் மேற்கு வங்க தொழிலாளி உயிரிழக்க என்ன காரணம்? மருத்துவர் விளக்கம்!

அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த நடுவீரப்பட்டு போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவன் உயிரிழப்புக்கு என்ன காரணம் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 10 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details