தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் பூசாரி மீது பாய்ந்த போக்சோ; 17 வயது மாணவி கர்ப்பம்! - MDU POCSO PRIEST ARREST

படிக்கச் சென்ற பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த பூசாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ வழக்கு கோப்புப் படம்
கோப்புப் படம் (Representational Image (ETV Bharat))

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 10:01 AM IST

மதுரை: கட்டட வேலைக்குச் செல்லும் பெற்றோர், வேலைக்குக் கிளம்பும் நேரத்தில் மகள் வயிற்று வலியால் துடித்ததைக் கண்டு அதிச்சியடைந்தனர். உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு அரசு இராசாசி மருத்துவமனைச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தததால், பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டது 12-ஆம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவி என்பதால் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிப்பதற்காகக் கோயிலில் தஞ்சம்:

பொதுவாக தந்தையும் தாயும் கட்டட வேலைக்குச் செல்வதால், பாதிக்கப்பட்ட மாணவி அவரது தங்கை மற்றும் தோழிகளுடன் சாய்பாபா கோயிலுக்கு படிப்பதற்காகச் செல்வார் எனவும், பின்னர் இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புவார் எனவும் பெண்ணின் தாய் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கோயில் பணிகளையும் இம்மாணவி செய்துவந்ததாக தாய் காவல்நிலையத்தில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாணவியின் தாய் காவல்நிலையத்தில் அளித்தப் புகாரில், "என் மகள் 8 மாத கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டேன். அப்போது சாய்பாபா கோயில் பூசாரி சசிகுமார் (45) தான் இதற்கு காரணம் என்று கூறினார். மேலும், தன்னை ஒன்றரை ஆண்டுகளாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக மகள் கூறினார்,” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க
  1. மெரினா ஜோடிக்கு ஜாமீன்..! சந்திரமோகனுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட கண்டிஷன்..!
  2. அரசு பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர்; மாணவர் செய்த காரியம்!
  3. போலீசை தாக்கிய திருநங்கை.. பெண் தயாரிப்பாளருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு சிறை

கொன்று விடுவதாக மிரட்டல்:

கோயில் மாடியில் இருக்கும் பூசாரி வீட்டில் வைத்து தான் மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பலமுறை இந்த கொடுமையை அனுபவித்த மாணவி, தன்னை விட்டுவிடும் படி அவரிடம் கோட்டபோது, ‘நான் எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தோடு அழித்துவிடுவேன்,’ என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து மாணவி, இந்த காரியத்தை பெற்றோரிடம் இருந்து மறைந்ததாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் Cr.No.50/2024, u/s 5(1), 5(j) (2) மற்றும் போக்சோ சட்டம் 2012 & 351 (2) உள்ளிட்ட பல பிரிவுகளில் கீழ் சசிகுமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சாமியார் இதுபோன்று வேறு ஏதேனும் பெண்களிடம் பாலியல் ரீதியில் மோசமாக நடந்துகொண்டாரா என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details