தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.40,000 சம்பளம்.. அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்த பாலிடெக்னிக் படிப்புகள் - ஆணையரின் உத்வேக வழிகாட்டுதல்கள்! - Polytechnic Courses Scopes - POLYTECHNIC COURSES SCOPES

Polytechnic Students scopes: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கடைசி 6 மாதம் தொழிற்சாலைகளில் சென்று பயிற்சி பெற வேண்டும் என்றும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த 75 சதவீதம் மாணவர்களுக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் தொழில்நுட்பக்கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Government Polytechnic college
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக்கல்வி ஆணையர் வீரராகவ ராவ் (credits - Madurai Government Polytechnic college website & ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 8:35 PM IST

தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகராவ் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 492 இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளான மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering), சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electrical and Electronics engineering), எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Communications Engineering ), கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (Computer Engineering), மீன்வளத் தொழில்நுட்பம், மெரைன் இன்ஜினியரிங் (Marine engineering) உள்ளிட்ட பட்டயப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அரசுக் கல்லூரிகலில் மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18 ஆயிரத்து 863 இடங்களில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 54 ஆயிரத்து 389 இடங்களுக்கு கடந்தாண்டு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 54 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு, பகுதிநேரப் பட்டயப் படிப்பிற்கு https://www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகராவ் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியாதாவது, “தமிழ்நாட்டில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. தற்போது இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் விண்ணப்பம்:இதில் முதலாம் ஆண்டில் சேர்வதற்கு மே 31ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், இதுவரை 10 ஆயிரத்து 903 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலமாக விண்ணப்பம் செய்துள்ளனர். இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கு மே 27ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம். அந்த வகையில், 2ஆம் ஆண்டில் நேரடி சேர்க்கைக்கு இதுவரையில் 11 ஆயிரத்து 33 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும், பகுதி நேர பட்டயப் படிப்பிற்கு 144 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

காலி இடங்கள்: பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமாக 18 ஆயிரத்து 863 இடங்கள் உள்ளது. இதில் 2ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 8 ஆயிரத்து 604 இடங்களும், பகுதிநேரத்தில் படிப்பதற்கு 965 இடங்களும் உள்ளன. அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 3 வருட படிப்புகளுக்கு 121 கிளைகளில் வாய்ப்பு உள்ளது.

வேலை வாய்ப்பு: பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. கடந்தாண்டு படித்த மாணவர்களுக்கு 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மாதச் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மாணவர்களில், 75 சதவீதம் மாணவர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். இளைஞர்களுக்கு தொழிற்சாலை தொடர்பான பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்.

நான் முதல்வன் திட்டம்:நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கடந்த 3 ஆண்டில் 1 லட்சத்து 92 ஆயிரம் மாணவர்களுக்கு, பாடப்பிரிவு தொடர்பான தொழிற்பயிசியை வழங்கியுள்ளோம். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளிப்பதால் நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

பாலிடெக்னிக் கல்லூரிகள் துவக்குவதற்கு அனுமதி அளிக்கும் போதே, தேவையான அளவிற்கு கட்டிடங்கள், தொழிற் பயிற்சி அளிப்பதற்கான ஒர்க் ஷாப், இயந்திரங்கள் போன்றவை ஆய்வு செய்து அளித்துள்ளோம். மேலும், நவீன தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (Centre of Excellence) உருவாக்கி வருகிறோம்.

பாடத்திட்டம் மாற்றம்:இந்த நிலையில், 44 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழிற்சாலை 4.0 தரத்தில் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் உருவாக்கி வருகிறோம். கல்லூரியில் படிக்கும் போதே தொழிற்சாலையிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு கற்பிக்கப்படுகிறது. இந்தாண்டு முதல் 3 ஆண்டு மாணவர்களுக்கும் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுகிறது.

மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் போது தொழிற்சாலைக்கு தயார் நிலையில் இல்லாமல் இருப்பதால் தான் நான் முதல்வன் திட்டம் துவக்கப்பட்டது. அதில், தொழில் திறன் (Skills), பேச்சு பயிற்சி (communication skills), கம்ப்யூட்டர் பயிற்சி (computer skills), பாடப்பிரிவிற்கு ஏற்ப வழங்கி வருகிறோம். இதனால் மாணவர்கள் தொழிற்சாலைக்கு ஏற்ப தயார் நிலையில் இருப்பர்.

நான் முதல்வன் திட்டம் தொடங்கிய பின்னர் தொடர்பு கொள்வதற்கான பேச்சு பயிற்சி திறன் அதிகரித்துள்ளது என வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகளில் கடைசி 6 மாதத்தில் தொழிற்சாலைகளில் சென்று பயிற்சி பெற வேண்டும். எனவே, அனைத்து மாணவர்களுக்கும் தொழில் திறன் பயிற்சி கிடைக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஏற்காடு 47வது கோடை விழா மலர் கண்காட்சி.. கண்ணைக் கவரும் மலர் மாடலின் கிளிக்ஸ்! - Yercaud Flower Show

ABOUT THE AUTHOR

...view details