தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை மாநகராட்சி கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர் பிளக்ஸ் பேனருடன் வந்ததால் பரபரப்பு..! - Thanjavur Mayor Ramanathan

Thanjavur Corporation: தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் இன்று (ஜன.24) நடைபெற்றது.

tanjore municipal corporation
தஞ்சை மாநகராட்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 7:07 PM IST

தஞ்சாவூர்:தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதனையடுத்து, மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு குறைகளை மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தனர்.

அப்போது, சேப்ப நாயக்கன்வாரி, 20வது வார்டு அதிமுக கவுன்சிலர் சரவணன் தங்களது பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி திடீரென தான் கொண்டு வந்த பிளக்ஸ் பேனரை மேயரிடம் காண்பித்தார். அதில் நல்லா இருந்த தஞ்சாவூரும், நாசமாக்கிய ஊதா குழாயும், 24 மணி நேரமும் கேள்வி ?? என அச்சிடப்பட்டிருந்தது.

இது குறித்து, மாமன்ற கூட்டத்து கவுன்சிலர் சரவணன் பேசியதாவது, “தண்ணீர் பிரச்சனையைத் தீர்த்துத் தர வேண்டும் என்று நான் பலமுறை அதிகாரிகளிடத்தில் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு நீங்கள் பெயர் மாற்றாம் செய்து உள்ளீர்கள் அதைத் தவிர நீங்க எந்த திட்டத்தையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மேயர் ராமநாதன் குடிநீர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு ஊதா கலரில் பைப்பு அமைத்து. அதில், குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. அந்த குடிநீர் இணைப்பு மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதற்கான பணிகள் சேப்பநாயக்கன் வாரி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்தாலும் குடிநீர் பற்றாக்குறை இதனால், மாநகராட்சி கூட்டம் பரபரப்பாகக் காணப்பட்டது.

இதையும் படிங்க:பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரம்; தீவிரமடையும் விசாரணை.. விரைவில் கைது நடவடிக்கை?

ABOUT THE AUTHOR

...view details