தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது! - Teachers Recruitment Board - TEACHERS RECRUITMENT BOARD

Tamil Nadu Teachers Recruitment Board: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற 3 ஆயிரத்து 791 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சுற்று சென்னையில் மே 30, 31 மற்றும் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் அலுவலர்
சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் அலுவலர் (PHOTO CREDITS- ETV BHARAT TAMIL NADU)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 2:53 PM IST

சென்னை:பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணிக்கு 3 ஆயிரத்து 192 காலிப்பணியிடங்கள் நிர்ப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வு முடிந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்ப அறிவிப்பு: முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, 2023-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணிகளுக்காக 3,192 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 13ஆம் தேதி வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

நடந்து முடிந்த எழுத்துத் தேர்வு:தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிறத்துறைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியருக்கான பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 41 ஆயிரத்து 485 தேர்வர்கள் விண்ணப்பம் செய்த நிலையில். பிப்ரவரி 4ஆம் தேதி 130 மையங்களில் ஆன்லைன் மூலம் ஒஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தமிழ் மொழி திறன் அறிவிற்கான 30 கேள்விகள்- 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள்- 150 மதிப்பெண்களுக்கு கேட்கப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான வினாக் குறிப்புகளை பிப்ரவரி 19ஆம் தேதி https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. அந்த வினாக் குறிப்புகள் மீது சந்தேகங்கள் இருந்த தேர்வர்கள் பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

வெளிவந்த எழுத்து தேர்வு முடிவுகள்:
2023-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான ஒஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம், 2024 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இணையதளத்தில் மற்றும் மே 22ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.

தயாரான சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியல்:தேர்வு எழுதிய தேர்வர்களின் ஒஎம்ஆர் மதிப்பெண்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டில்(2) தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்களை (Weightage marks) சேர்த்து, மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது. இதன் அடிப்படையில், பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புப் கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது அழைப்புக் கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவற்றை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள் பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவிக்கப்படுகிறது.

இணைவழியில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்:மேலும் அழைப்புக்கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படாது எனவும் பணிநாடுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய பக்கத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளை ஏதேனும் இருந்தால் trbgrievances@tn.gov.in என்ற இணையப்பக்கத்திலோ அல்லது 18004256753 என்ற அழைபேசி எண்ணிக்கோ தொடர்பு கொள்ளலாம். பிற வழியில் கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து அனைத்து
விவரங்களும் வெளிப்படையாக இணையதளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மே 30, 31ஆம் தேதிகள் மற்றும் ஜூன் 1, 2 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

அதேபோல் கணக்கு பாடத்திற்கு சேத்துபட்டியில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் மே 30, 31ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. மேலும் இதனை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராமேஸ்வர முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:RTE மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; குலுக்கல் முறையில் தேர்வு! -

ABOUT THE AUTHOR

...view details