தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஃபோர்டு தொழிற்சாலை; தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி! - Ford in Chennai - FORD IN CHENNAI

ஃபோர்டு தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை (Consent to Operate- CTO) புதுப்பிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits -ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 10:55 PM IST

சென்னை: தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை (Consent to Operate- CTO) கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது. இதனைத் தொடர்ந்து இசைவாணையை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் போர்டு நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பதை பரிசீலனை செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இசைவாணையை 31.3.2028 வரை புதுப்பித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் உடனான, தமிழகத்தின் 30 ஆண்டுக்கால உறவைப் புதுப்பிப்பது தொடர்பாகவும், மீண்டும் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்தும் அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

அதன் பயனாக, ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் தமது உற்பத்தி தொழில்சாலையை இயக்கவுள்ளதாகவும், சென்னை மறைமலை நகரில் ஏற்கெனவே உள்ள தமது ஆலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க அந்நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

இதுதொடர்பாக, ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவின் தலைவர் கே ஹார்ட் தமது லிங்கிடுஇன் பக்கத்தில் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ஃபோர்டு நிறுவனம் சென்னையில் உள்ள தமது தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஆவலாக உள்ளது. இதற்கான விருப்ப கடிதத்தை (Letter of Intent) தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை உள்பட தமிழக அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கே ஹார்ட் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details