தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிலாடி நபி எப்போது? பொது விடுமுறையில் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு! - milad nabi holiday

Milad Nabi holiday: மிலாடி நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்டம்பர் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறையை அறிவித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம்ஸ மிலாடி நபி தொடர்பான படம்
தலைமைச் செயலகம்ஸ மிலாடி நபி தொடர்பான படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 5:49 PM IST

சென்னை: செப்டம்பர் 4 ஆம் தேதி பிறை தென்படவில்லை என்பதால், செப்.6 ஆம் தேதி முதல் பிறை என்று ஷ்ரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்திருந்தார்.

இதையடுத்து, முன்னதாக செப்டம்பர் 16 ஆம் தேதி மிலாடி நபிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்.17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு மறுஉத்தரவு பிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 16-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், செப். 4-ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட பிறை தெரியாததால், செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை காஜி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப். 17ஆம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் இன்று வெளியி்ட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தமிழகத்துக்கு கல்விக்கான நிதி வழங்க மறுப்பதா? மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details