தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி செல்கிறார் மு.க.ஸ்டாலின்.. நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பு! - NITI Aayog Meeting - NITI AAYOG MEETING

M.K.Stalin participate in NITI Aayog Meeting: ஜூலை 27ஆம் தேதி பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 3:11 PM IST

சென்னை:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் (NITI Aayog Meeting), டெல்லியில் ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதாவது, மோடி பிரதமராக பதவியேற்று 3வது முறை ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாகவும், கூட்டத்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் நிலுவைத்தொகை, நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச உள்ளதாகவும், அதற்காக வரும் ஜூலை 26 இரவு அல்லது 27ஆம் தேதி காலை சென்னையில் டெல்லி செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிதி ஆயோக்கின் 9வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். அதுமட்டுமின்றி, நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான கவுன்சிலில் அனைத்து மாநில முதலமைச்சர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், நரேந்திர மோடி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்றதை அடுத்து நிதி ஆயோக் அமைப்பு சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவுள்ளதாகவும், இதற்காக வரும் ஜூலை 25ஆம் தேதி அவர் டெல்லிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: துணை முதலமைச்சர் பதவியா? - அமைச்சர் உதயநிதி பளீச் பதில்

ABOUT THE AUTHOR

...view details