தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்; மு க ஸ்டாலின் தலைமையில் 23ம் தேதி நடைபெறும்! - mk stalin

summary: தமிழ்நாடு சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து வரும் 23ம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 11:01 PM IST

Updated : Jan 20, 2024, 7:26 AM IST

சென்னை:தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஜனவரி 28ம் தேதி ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல் அளிப்பதற்கும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க தூத்துக்குடி எம்.பி கனிமொழி தலைமையில் குழு அமைத்துள்ளது என திமுக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கேலோ இந்தியா; சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

Last Updated : Jan 20, 2024, 7:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details