தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வேங்கைவயல் சம்பவத்திற்கு தீர்வு இல்லை.. 3 ஆண்டு ஆட்சி தோல்வி” - தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு! - Tamilisai Soundararajan - TAMILISAI SOUNDARARAJAN

Tamilisai Soundararajan: வேங்கைவயல் சம்பவத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும், எனவே, தமிழக அரசின் 3 ஆண்டு ஆட்சி தோல்வியடைந்துள்ளது என்றும் பாஜக தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan
தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 6:52 PM IST

Updated : May 16, 2024, 7:19 PM IST

தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு (Tamilisai Soundararajan)

சென்னை:சென்னை கே.கே நகரில் உள்ள லட்சுமண சாமி சாலை சந்திப்பு தெருவில், பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, இன்று தென் சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ வெயிலின் காரணமாக தன்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும் தண்ணீர் பந்தலை திறந்து விட்டோம். சூரியன் மறைந்து விட்டது. மழை பொழிகிறது, இனி குளங்களில் தண்ணீர் நிரம்பும். எனவே, தாமரை மலரும்.

தமிழகத்தில் கலாச்சாரம் சீர்குலைந்து விட்டது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் போதைப் பொருள் கலாச்சாரம் வெளிப்படையாகவேத் தெரிகிறது. தமிழக அரசு போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த முன் வர வேண்டும். பொதுமக்கள் பயணம் செய்யும் அரசுப் பேருந்தில் கத்தி, அரிவாள், துப்பாக்கி ஆகியவை பயணம் செய்கிறது. மோசமான கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் மறுபடியும் தலை எடுத்துள்ளது.

மேலும், கொலை, கொள்ளை திருட்டு அதிகரித்துள்ளது. இதற்கு மாநில அரசு பதில் சொல்ல வேண்டும். இன்று டெங்கு தினம். சனாதனத்தை டெங்கு மாதிரி ஒழிப்பேன் என்று கூறினார்கள், ஆனால் டெங்குவை ஒழிக்கவில்லை. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு அதிகரித்துள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதாரண குடிமகனுக்கு இருக்கக்கூடிய சொத்துக்கள் தான் இருக்கிறது. 140 கோடி மக்கள் எனது குடும்பம் என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளார். வாரிசு அரசியல் வைத்துக் கொண்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி கொடுத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில், மக்களுக்காக நான் இருக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனுவின் மூலமாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், போதைப் பொருள் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். வேங்கை வயல் குறித்து இதுவரைக்கும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அதற்குள் சமூக நீதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதற்கிடையில், மற்றொரு இடத்தில் மாட்டுக்கழிவு தண்ணீரில் கலந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது. இவை அனைத்தும் தமிழக அரசின் 3 ஆண்டு தோல்வியாகும்.

இதையும் படிங்க:கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா! விழாவில் இடம் பெறும் இந்திய படங்கள் என்னென்ன? - Cannes Film Festival 2024

Last Updated : May 16, 2024, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details