நீலகிரி:நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகளைச் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேசுகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பழங்குடியினர் மக்களின் மொழிகளை மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை ஆவணப்படுத்தும் வகையில் தனித்துறை அமைக்கப்பட்டு இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் மலைக் கிராமங்களில் வசிக்கக்கூடிய தோடர் ,கோத்தர், குறும்பர் போன்ற பழங்குடியினர் மக்கள் மற்றும் பூர்வ குடிகளான படுகர் சமுதாயம் மக்களின் மொழிகளை ஆவணப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கூறினார்.