சென்னை:2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் (12th exam result) இன்று வெளியாகின. இதில் 97.45 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் 10,810 மாணவர்கள், 13,039 மாணவிகள் என மொத்தம் 23,849 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 10,440 மாணவர்கள், 12,802 மாணவிகள் என மொத்தம 23,242 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதமான 97.45 சதவீதத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.58 மற்றும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 98.18
திருப்பூரை அடுத்து 97.42 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. 97.25 தேர்ச்சி விகிதத்துடன் அரியலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.