தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானார்! - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

TN minister father passed away: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர் சா.பெருமாள் சாமி கவுண்டர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Tamil Nadu minister MP saminathan father Perumalsamy Gounder passed away
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 10:16 AM IST

Updated : Feb 23, 2024, 12:10 PM IST

திருப்பூர்:தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர் சா.பெருமாள் சாமி கவுண்டர் (94) உடல்நலக் குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (பிப்.23) காலை காலமானார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்த செய்திக்குறிப்பில், "தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர் சா.பெருமாள்சாமி மறைந்த செய்தி அறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததை குறிப்பிட்டார். பெருமாள்சாமி குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ சாலை விபத்தில் உயிரிழப்பு!

Last Updated : Feb 23, 2024, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details