தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல்னு வந்துட்டா ... பாஜகவுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் செய்த சம்பவம்! - TN DMK win 40 constituency - TN DMK WIN 40 CONSTITUENCY

நாடாளுமன்ற தேர்தல் என வந்துவிட்டால் எந்த சூழலிலும் பாஜகவை மாநிலத்தில் கால்பதிக்க விடமாட்டோம் என்பதை தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மு.க ஸ்டாலின், பிரதமர் மோடி புகைப்படம்
மு.க ஸ்டாலின், பிரதமர் மோடி புகைப்படம் (Credit: DMK X page and Getty image)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 7:50 PM IST

சென்னை: 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 40க்கும் 40 என்ற அசத்தல் வெற்றியை நோக்கி திமுக கூட்டணி சென்று கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் திமுக அரசு மீது அதிருப்தியில் இருந்ததாகவும், இந்த அதிருப்தி 2024 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.

மறுபுறம், தமிழகத்தில் திமுக vs அதிமுக என்றிருக்கும் இருதுருவ அரசியலை மாற்றுவதற்கான அடித்தளத்தில் இத்தேர்தலில் அமைத்தே ஆக வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் தீவிரமாக செயல்பட்டது தமிழக பாஜக. பிரதமர் மோடி மட்டும், தேர்தலுக்கும் சில மாதங்களுக்கு தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 10 முறை வருகைபுரிந்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ உள்ளிட்டவைகளை நடத்தி, தன்னால் இயன்றவரை தமிழக மக்கள் மனதில் தாமரை சின்னத்தை பதிக்க பார்த்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காக மோடி, அமித் ஷா, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் இத்தொடர் முயற்சிக்கு தேர்தலில் கொஞ்சம் பலன் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கூடவே, பாஜகவுடன் பாமகவும் கடைசி நேரத்தில் கைகோர்த்ததால் இந்தமுறை தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்துவிடும் என்றே பாஜக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இரவு 7 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஓரிரு இடங்களில் கூட வெற்றிப் பெறுவதற்கான சாத்தியங்கள் அவ்வளவாக தெரியவில்லை. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நயினார் நாகேந்திரன், அமமுகவின் டிடிவி தினகரன், பாமகவின் நட்சத்திர வேட்பாளர் சௌமியா அன்புமணி என முக்கிய வேட்பாளர்கள் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில்லை என்பதே தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் காட்டுகின்றன.

இதன் மூலம், நாடாளுமன்ற தேர்தல்னு வந்துட்டா, பாஜகவை தமிழ்நாட்டில் கால்பதிக்க விடமாட்டோம் என்பதை தமிழக மக்கள் நிரூபித்து உள்ளதையே இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இதையும் படிங்க:“கோவை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன்” - கணபதி ராஜ்குமார் உறுதி! - Lok Sabha Election Results 2024

ABOUT THE AUTHOR

...view details