தஞ்சை மாவட்டத்தில் கொலை நடந்த அரசுப் பள்ளிக்கு திங்கள்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Nov 20 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY WED NOV 20 2024
Published : Nov 20, 2024, 8:00 AM IST
|Updated : Nov 20, 2024, 11:00 PM IST
தஞ்சை ஆசிரியை கொலை நடந்த பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
உலக பாரம்பரிய வாரம்; தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையை நவ.25 வரை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்!
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, நவ 25 வரை பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் டேனீஷ் கோட்டை மற்றும் தொல்லியல் அகழ்வைப்பகத்தை கட்டணம் இன்றி இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. | Read More
கிருஷ்ணகிரி போலி என்.சி.சி முகாம் விவகாரம்; 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் விசாரணை குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. | Read More
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு !
தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம்; நெல்லை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். | Read More
பத்திரிகையாளர் வி.டி.ராஜேசகர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வி.டி.ராஜசேகர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். | Read More
சென்னையில் சொகுசு கார் மோதிய விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி.. ஓட்டுநர் தப்பியோட்டம்
சென்னை மதுரவாயல் அருகே சொகுசு கார் மோதிய விபத்தில் தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தஞ்சை ஆசிரியை கொலை: பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்!
தஞ்சை ஆசிரியை ரமணி கொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. | Read More
வேலூரில் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: போக்சோவில் 3 பேர் கைது!
வேலூரில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது - செயல்திட்டக் குழு கூட்டத்துக்கு பிறகு டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி!
உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சியாக திமுக எப்போதும் தயாராகவே இருப்பதாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். | Read More
"சிபிஐ வசம் போகும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு" அடுத்தது என்ன? அமைச்சர் ரகுபதி அப்டேட்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். | Read More
"தென்தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More
கோவை மாணவியின் மரணத்துக்கு என்ன காரணம்?.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கோவையைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனையான மாணவி எலினா லாரெட் ரயிலில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்கிச் சாப்பிட்டதால் உயிரிழக்கவில்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
ஓசூர் பயங்கரம்.. அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். | Read More
தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை; இருவருக்கு சிறை; 8 லட்சம் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்!
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ள இலங்கை நீதிமன்றம், இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் படகோட்டிகள் இருவருக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. | Read More
TNPSC தேர்வில் போலிச் சான்றிதழ் கொடுத்து முறைகேடு செய்த வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கெடு!
2019 ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில் போலிச் சான்று கொடுத்த முறைகேடு செய்த வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
ரஷ்ய அரசு பெயரில் தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி; தாசில்தார் உள்ளிட்ட 9 பேர் கைது!
ரஷ்ய அரசு பெயரில் ரூ.2000 கோடி முதலீடு பெற்றுத் தருவதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் தாசில்சார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் | Read More
பாகிஸ்தான் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். | Read More
நெல்லை ஜெயக்குமார் வழக்கில் மூன்று மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்... செல்வப்பெருந்தகை தகவல்..!
நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் வழக்கில் சிபிசிஐடி போலீசார் மூன்று பேரை அடையாளம் கண்டுள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். | Read More
இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம்: அரசுக் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது!
ராமநாதபுரம் பரமகுடியில், இம்மானுவேல் சேகரனின் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். | Read More
இனி காலேஜுக்கு மாணவர்கள் மட்டுமில்ல ஆசிரியர்களும் லேட்டா போகக்கூடாது.. உயர்கல்வித்துறை நடவடிக்கை!
பல்கலைக்கழகங்கள் சுமுகமாகச் செயல்படும் வகையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் வருகையை உறுதி செய்வதற்காக பயோமெட்ரிக் வருகை பதிவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் உயர் கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். | Read More
'யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை'.. விஜய் கட்சி குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி சட்டென சொன்ன பதில்..!
விஜய்யின் கட்சிக்கு என்ன வாக்கு வாங்கி இருக்கிறது என்று தெரியவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். | Read More
"மாமன்னன் தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம்" - உறுதி செய்த உயர் நீதிமன்றம்!
இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம், 'மாமன்னன்' தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. | Read More
மருத்துவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமராவா! இது அவமானப்படுத்தும் செயல் என சங்கம் எதிர்ப்பு!
பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிக்கையால் மருத்துவர் செவிலியர் தாக்கப்படலாம் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More
'TAMILNADU' வார்த்தையில் ழகரம் இல்லை.. அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு..!
தமிழ்நாடு அரசாணைகளில் 'TAMILNADU' என்ற வார்த்தையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
புத்தாண்டில் புத்தகத் திருவிழா.. சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | Read More
பள்ளியில் வைத்து ஆசிரியை கொலை; திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்!
திருமணத்திற்கு மறுத்ததால், அரசுப் பள்ளியில் இருந்த ஆசிரியையை நேரடியாக சென்று கொலை செய்த இளைஞரின் வெறிச்செயல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. | Read More
சென்னையில் வாட்ஸ்ஆப் குழு அமைத்து மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்...சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!
குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வாட்ஸ் ஆப் குழுவில் வந்த குறிப்பை பயன்படுத்தி கணவனே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
சென்னை விமான நிலையத்தில் இன்றும் 12 விமான சேவைகள் திடீர் ரத்து.. பயணிகள் கடும் அவதி!
சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.20) 12 விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். | Read More
கத்தி முனையில் கணவன்.. மனைவிக்கு திடீரென வந்த யோசனை.. சிதறி ஓடிய கொள்ளையர்கள்.. கரூரில் தீரன் பட சம்பவம்!
கரூரில் தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளை அடிக்க முயன்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். | Read More
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்... காவல்துறை குறித்து கடும் விமர்சனம்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"அதிமுக-பாஜக இடையே என்ன நடக்கிறது?" - திருமாவளவன் சொல்வது இதுதான்!
அதிமுகவை தனிமைப்படுத்தி, மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேறு வழியில்லை என்கிற நெருக்கடியை பாஜக அளித்து வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More
பள்ளி மாணவி மரணம்: காரணம் சிக்கன் பிரைடு ரைசா? கூடைப்பந்தா?
கூடைப்பந்து விளையாடி விட்டு ரயிலில் பயணம் செய்த கோயம்புத்தூர் பள்ளி மாணவி, சென்னையில் வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. | Read More
படகுகளை விடுவிக்க மீனவர்கள், தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் கடற்படைக்கு வழங்க உத்தரவு- இலங்கை அரசின் பிடிவாதம்!
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் உட்பட 13 படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்குமாறு புதிய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. | Read More
பைக்கில் 3 பள்ளி மாணவர்கள் பயணம் - மரத்தில் மோதி நொடியில் ஒருவர் மரணம்!
சட்டவிரோதமாக ஒரு பைக்கில் மூன்று பள்ளி மாணவர்கள் சென்று மரத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். | Read More
School Leave: தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தொடர் கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். | Read More
குழந்தை, தாய் கடத்தல்: சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்த காவல்துறை!
ராணிப்பேட்டையில் நிதிநிறுவன உரிமையாளரின் மனைவி, மகளை கடத்தி 1 கோடி பணம் கேட்டு மிரட்டிய ஒரு பெண் உட்பட 8 பேர் கைது - 5 லட்சம் ரொக்கம், இரு கார்கள் பறிமுதல். | Read More