திருநெல்வேலி மாவட்டத்தில், காரில் மோதும் படியாக சென்றவர்களை தட்டிக்கேட்ட சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Mon Nov 04 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY MON NOV 04 2024
Published : Nov 4, 2024, 7:50 AM IST
|Updated : Nov 4, 2024, 11:00 PM IST
நெல்லையில் மீண்டும் ஓர் நாங்குநேரி சம்பவம்: 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பல்!
கேரள ரயில் விபத்தில் இறந்த தமிழக தூய்மை பணியாளர்களின் உடல் சொந்த ஊரில் தகனம்..
கேரள மாநிலம் சொரனூர் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவரகளது உடல் சேலத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது | Read More
"சமூக நலத்துறை பணியிடத்துக்கு இந்தி மொழி தகுதியாக கோரி விளம்பரம் வெளியிட்ட அதிகாரி நீக்கம்"-அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், அழைப்பு ஏற்பாளர் பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார். | Read More
சென்னை மெட்ரோ ரயில்களில் அக்டோபரில் மட்டும் 90.83 லட்சம் பேர் பயணம்!
அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. | Read More
போதை பொருட்களை விற்பனை செய்ததாக தனியார் பொறியல் கல்லூரி மாணவர்கள் ஐவர் கைது!
போதை பொருட்களை விற்பனை செய்துவந்த தனியார் பொறியல் கல்லூரி மாணவர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் | Read More
சத்தியமங்கலம் புலிகள் வேட்டை வழக்கு; முக்கிய குற்றவாளியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர திட்டம்!
சத்தியமங்கலத்தில் ஐந்து புலிகளை வேட்டையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளியை தமிழ்நாடு கொண்டு வர போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட வன அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். | Read More
“அரசு விதித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கின்றனர்” தனியார் கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!
சென்னை குருநானக் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) சார்பில் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | Read More
சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணங்கள்..!
தீபாவளி விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் விமான கட்டணங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் குறைவாக உள்ளது. | Read More
"அரசு பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலைக்கு தகுதி இல்லையா?"-குமுறும் மாணவர்கள்!
உதவி புவி இயற்பியலாளர் பணியிடங்களுக்கு தங்களை நியமிக்க கோரி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். | Read More
100 நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஊராட்சித்தலைவர் முறைகேடு... புகாரளித்தவர்களுக்கு மிரட்டல்!
வெள்ளியம்பதி திமுக ஊராட்சித்தலைவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தினை முறைகேடு செய்ததாக இருவர் புகாரளித்திருந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென புகாரளித்த இருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். | Read More
"மருந்துகளின் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டதை திரும்பப்பெற வேண்டும்" மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!
"முதுகலை பட்ட படிப்பில் அரசு சாரா மருத்துவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்திட வேண்டும், மருந்துகளின் விலையை 50 சதவீதம் உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும்" என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. | Read More
“கையால் பெயர்ந்து வரும் புதிய தார் சாலை"-தரமான சாலை அமைக்கும்படி மக்கள் கோரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூர் பகுதியில் போடப்பட்ட தார் சாலை கையால் பெயர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். | Read More
பள்ளி செல்ல 10 கி.மீ. நடைபயணம்... சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அவலம்
தேனியில் பெய்த கனமழை காரணமாக, மலை கிராம சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக சீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். | Read More
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய மக்கள்.. ஸ்தம்பித்துப் போன சாலைகள்!
தீபாவளி தொடர் விடுமுறையை முடித்துக் கொண்டு நேற்று மாலையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னையை நோக்கி வந்ததால் தாம்பரம், பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | Read More
“பாசிசம் என்றால் என்ன தெரியுமா?"- எச்.ராஜா கொடுத்த விளக்கம் இதுதான்!
பாசிசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? என்பதற்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா புதிதாக விளக்கம் அளித்துள்ளார். | Read More
வட மாவட்டங்களில் எப்போது வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்? - வானிலை தன்னார்வலர் கூறுவது என்ன?
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் வலுப்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். | Read More
அரசு உதவிபெறும் பள்ளியில் ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு.. போலீசார் விசாரணை!
நெல்லை வாகைகுளம் அரசு உதவிபெறும் பள்ளியில் மர்ம நபர்கள் ஆவணங்களுக்கு தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
ஜெர்மன் நாட்டு இளைஞர்களை கவர்ந்த சாணி அடிக்கும் திருவிழா.. ஈரோடு தாளவாடியில் விநோதம்!
தாளவாடியில் நடைபெற்ற சாணியடி திருவிழாவை காண வருகை தந்த வெளிநாட்டு இளைஞர்கள், திருவிழாவை தொடக்கத்தில் இருந்து இறுதி வரை படம் பிடித்தை தங்களது நாட்டு மக்களுக்கு காட்ட போவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். | Read More
நெல்லையில் பயணியின் கன்னத்தில் அறைந்த நடத்துனர் பணியிடை நீக்கம்!
நெல்லையில் அதிகளவு லக்கேஜ்களுடன் பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துனர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலனாதை தொடர்ந்து புகாருக்குள்ளானவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். | Read More
திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் மயங்கி விழுந்த மாணவிகள், பதறிய பெற்றோர்கள்...அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு புகாருக்கு உள்ளான தனியார் பள்ளியில் 5க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை..கிடுகிடுவென உயரும் வைகை அணையின் நீர்மட்டம்!
தொடர் கனமழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் 63.45 அடியாக உள்ளது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 2862 கன அடியாக உள்ளது. | Read More
“விஜய் எதற்காக கட்சி தொடங்கியிருக்கிறார் தெரியுமா?”- இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் சொன்ன புது தகவல்!
திமுகவை கடுமையாக விமர்சிக்கதானே அவர் கட்சி ஆரம்பித்துள்ளார், கொள்கையென கூறி அரைத்த மாவையே அரைக்கிறார் இதனால் மாவுதான் வீணாகிறது என சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்ச்சித்துள்ளார். | Read More
'ஓரே நாடு ஓரே தேர்தல் அறிவிப்பை விஜய் திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்
தவெக தலைவர் விஜய், ஓரே நாடு ஓரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும் என்று கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார். | Read More
"திருசெந்தூர் கோயில் விடுதி அறைகளில் டிவியை அகற்றுங்கள்" -கந்தசஷ்டி விழா ஏற்பாட்டை பார்வையிட்ட நீதிபதி உத்தரவு!
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா பெரு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி புகழேந்தி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இன்று வருகை தந்தார். | Read More
போலீசாரிடம் அநாகரீகமாக பேசிய வழக்கு...சந்திரமோகன், தனலட்சுமி ஜாமீன் மனு தள்ளுபடி!
சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இதுதான் ரூட்..!
கோயம்புத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் வருகை தருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. | Read More
ரயில் ஏறும் அவசரத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை தவற விட்ட நபர்...மீட்டு ஒப்படைத்த கும்பகோணம் ரயில்வே போலீசார்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்த பையை ரயில்வே போலீசார் மீட்டு, தவறி விட்ட நபரின் உறவினரிடம் முறைப்படி ஒப்படைப்படைத்தனர். | Read More
இரும்பு கட்டில் கால் உடைந்து விழுந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு.. திண்டுக்கல்லில் சோகம்!
திண்டுக்கல்லில் இரும்பு கட்டில் கால் உடைந்து விழுந்ததில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
'ஆடை கட்டுப்பாடை மீறுவது சட்டவிரோதம்'.. உதயநிதிக்கு எதிராக மேலும் ஒரு மனு..!
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிகளை வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. | Read More
"புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க-வை அழிக்க நினைக்கின்றனர்" - மு.க.ஸ்டாலின் சாடல்!
புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் மறைமுகமாக விஜயை முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். | Read More
மரையூர் சத்திரத்தின் மோசமான நிலை; பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க கோரிக்கை!
ராணி மங்கம்மாள், மருது பாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாகத் திகழும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள மரையூர் பழமையான சத்திரத்தை தொல்லியல் துறை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More
ராணுவ கிராமத்தின் பார்வையில் ‘அமரன்’.. என்ன சொல்கிறார்கள் வீரர்கள்?
"ராணுவ வீரர் படும் கஷ்டங்களை குழந்தைகளுக்குச் சொன்னால் புரியாது. ஆனால் 'அமரன்' திரைப்படத்தின் மூலம் அவர்கள் எளிதாக புரிந்து கொண்டார்கள்" என தூத்துக்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளனர். | Read More
16 வயது சிறுமி கொலை; ஊதுபத்தி ஏத்தி நாடகமாடியது அம்பலம்!
வீட்டில் பணிபுரிந்த 16 வயதேயான சிறுமியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, நாடகமாடிய குடும்பத்தினரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
ஐந்து தலைமுறைகளுடன் 106வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி.. திண்டுக்கல் அருகே சுவாரஸ்யம்!
திண்டுக்கல் அருகே ஆரோக்கிய வாழ்வில் 5 தலைமுறைகள் கண்ட 106 வயது மூதாட்டி மகன், மகள்கள், கொள்ளுப்பேரன், எள்ளுப் பேரன்கள் என பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
பட்டாக் கத்தியுடன் மிரட்டிய இளைஞர்கள்... அலறிய வியாபாரிகள்.. தேனியில் பரபரப்பு..!
தேனியில் மதுபோதையில் இருந்த வாலிபர்கள் பட்டா கத்தியுடன் வியாபாரிகளை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். | Read More
"விஜய் படத்திற்கு தினமும் முத்தம் கொடுப்பேன்"- நண்பா, நண்பிகளையே மிஞ்சிய நெல்லை பாட்டி..!
நடிகர் விஜய் தனக்கு மூத்த மகன் என பாவித்து 63 வயதிலும் விஜயின் தீவிர ரசிகையாக வலம் வரும் நெல்லை வள்ளியம்மாள் பாட்டியை குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு. | Read More
16 வயது சிறுமி கொலை வழக்கு: கணவன் மனைவி உட்பட ஆறு பேர் நீதிமன்ற காவலில் அடைப்பு!
சென்னை அமைந்தகரையில் 16 வயது சிறுமியை அடித்து கொலை செய்த வழக்கில் கணவன் மனைவி உட்பட ஆறு பேரை நவம்பர் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More