தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முதலீட்டு மாநாடு.. ரூ.51 ஆயிரம் கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல்! - Tamil Nadu Investment Conclave 2024 - TAMIL NADU INVESTMENT CONCLAVE 2024

Tamil Nadu Investment Conclave 2024: முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற உள்ள தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் 19 நிறுவனங்களில் ரூ.17,616 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு துவக்க விழாவும், ரூ.51 ஆயிரம் கோடி அளவிற்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.

டி ஆர் பி ராஜா
டி ஆர் பி ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 10:39 PM IST

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், இன்று (ஆக.21) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது தான் நாணயமான ஆட்சி. கருணாநிதியின் நாணயமான ஆட்சி நடக்கிறது. அதன் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார். அதற்கு எடுத்துக்காட்டு தான், இன்று நடக்கும் முதலீட்டு மாநாடு. அதன்படி, 2021-23 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு தமிழகத்திற்கு ஈர்த்த முதலீடுகள்.

அந்த கனவெல்லாம் நனவாகி, மக்களுக்கு பயன் தரும் வகையில் வேலைவாய்ப்புகளாக உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், 17,616 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான துவக்க விழா இன்று நடைபெற உள்ளது. ஏறத்தாழ 65 ஆயிரம் நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் இடப்பட்டு, அனைத்தும் ஒப்புதல்களும் வழங்கப்பட்டு, இன்று 51,000 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட உள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ரூ.68,773 கோடி ரூபாய்க்கான திட்டம். இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் உண்டாகியுள்ளதாகக் கூறினார்.

கோவை விமான நிலையம் விரிவாக்கத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நகர்த்தியிருக்கிறோம். விரைவில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இடத்திற்கான நிதி செலவு செய்யாமல், 8 ஆண்டு ஆட்சியில் அப்படியே கிடந்தது.

கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான திட்ட வரையறையை மத்திய அரசு திரும்ப அனுப்பிருப்பது தமிழகத்தின் மீதான அக்கறையைக் காட்டுகிறது. இருப்பினும் முதலமைச்சர் கூறியதன்படி, இந்த திட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவோம் என்றார்.

தொழில் துறைக்கு ஏதுவான சூழலை தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியுள்ளார். எந்த இக்கட்டான சூழலை மத்திய அரசு நம் மீது திணித்தாலும் அதையெல்லாம் தகர்த்து, முதலீட்டாளர்களுக்கு ஒரு அற்புதமான சூழலை, உருவாக்கி நிறுவனத்திற்குத் தேவையான திறன் மிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கிறது.

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் இதுவரை கால் பதித்திராத மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்திற்கு வரவுள்ளது. இதுவரை இல்லாத அளவில் 390 நாட்களுக்குள்ளாக ஒப்பந்தம் போடப்பட்டு, நிறுவனம் அமைந்து திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கியுள்ளார்கள். அதுதான் முதலமைச்சருடைய சாதனை" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் வந்த அன்னிய முதலீடுகள் விபரம்.. ஈபிஎஸ் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா! - TRB Raja on Industrial Development

ABOUT THE AUTHOR

...view details