சென்னை:தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையில் இந்த ஆண்டிற்கான (2024-2025) புதிய 23 அறிவிப்புகள் இன்று பேரவையில் வெளியிட்டது. அந்த அறிவிப்புகள் பின்வருமாறு:
- தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை ( Space Teach Policy) வெளியிடப்படும்.
- சுழற்பொருளாதார (circular economy) துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்படும்.
- பொம்மைகள் பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒரு சிறப்புத் திட்டம் வெளியிடப்படும்.
- படைப்பு திறன் பொருளாதாரத்தை (creative economy) அடிப்படையாகக் கொண்டு தொழில் வளர்ச்சி அடையும் வகையில், ஒரு செயல் திட்ட வரைபடம் வெளியிடப்படும்.
- தொழிலகங்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றி, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு சேவைகள் வழங்குவதற்கும், மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் தொடங்கப்படும்.
- ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கு டோக்கியோவில் வழிகாட்டி நிறுவனம் மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு (Japan Desk) உருவாக்கப்படும்.
- சுற்றுலாத் துறையில், முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காகவும், அந்நிறுவனங்களுக்கான ஆதரவுச் சேவைகளை அளித்து, அத்திட்டங்கள் செயல்படுவதை கண்காணித்திடவும், வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு சிறப்பு அமைப்பு (Special Cell for Tourism Investment Promotion & Facilitation) ஏற்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் சுற்றுலாவை ஊக்குவித்து முதலீட்டை ஈர்க்கும் வண்ணம், சுற்றுலாதலங்களில் உகந்த இடங்களை சிப்காட் தேர்வு செய்து, தனியார் பங்களிப்புடன் சுற்றுலாதலங்களின் உள்கட்டமைப்பை ஏற்படுத்தும்.
- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் சுமார் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
- தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
- அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டத்தில் சுமார் 175 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற் பூங்கா ஒன்று உருவாக்கப்படும்.
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 150 ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திலும், கூத்தாநல்லூர் வட்டத்திலும் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.
- காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
- சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா ஒன்று உருவாக்கப்படும்.
- கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் விதம் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் விதம் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும்.
- தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழில் பூங்காக்களை சிப்காட் உருவாக்கும்.
- மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2,100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
- சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமையப் பெற்றுள்ள தொழிற் சா லை க ளின் தயாரிப்புப் பொருட்களுக்கான காட்சி மையம் (Product Display Centre) 5 மற்றும் 6 திட்ட மதிப்பீட்டில், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உருவாக்கப்படும்.
- தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி மற்றும் மாம்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக மொத்தம் 6 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.
- ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் M-Sand உற்பத்தி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.