தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு! - CYCLONE FENGAL

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 5:16 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் நிதி மட்டுமின்றி இதர நிதிகளையும் பேரிடர் கால சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசிதழில், "வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பார் 30-ஆம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்தது.

குறிப்பாக இப்புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

மேலும் ,விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஃபெஞ்சல் தற்காலிக, நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 675 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இதன் மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல், மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்," இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:

கனமழையால் சாத்தனூர் அணை திறப்பு காரணமாக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரங்களில் இருக்கும் கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப்பகுதி மக்களுக்கு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும், திருவண்ணாமலையில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, மலை அடிவாரத்தில் இருந்த மூன்று வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த விபத்தில் ஐந்து குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் என ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details