தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக ஆளுநருக்கு மனமாற்றம் வந்துள்ளது.. அப்படியே இருந்தால் நல்லது - செல்வப்பெருந்தகை பேச்சு!

தமிழக ஆளுநருக்கு மனமாற்றம் வந்துள்ளது, தொடர்ந்து இப்படியே இருந்தால் நன்றாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை (credit - Tamil Nadu Congress Committee X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 5:26 PM IST

சென்னை: வால்மீகி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில், வால்மீகி திருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "இன்று வால்மீகியின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக காங்கிரஸ் சார்பாக வால்மீகி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வால்மீகி குரல் அற்றவர்களுக்கு ஆதரவாக பேசியவர் என்றார்.

மேலும், சென்னையில் கனமழை பெய்த நேரத்தில், 14 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. நம் எதிர்பார்த்த அடை மழையும், பெருமழையும் வரவில்லை எனவும் அதனால் சென்னை தப்பித்து இருக்கிறது எனவும் கூறினார்.

இதையும் படிங்க:ஓடும் ரயில் படுக்கை சரிந்து சிறுவன் படுகாயம்.. நாகர்கோவில் - கோவை ரயிலில் அதிர்ச்சி!

தொடர்ந்து அவர், பெருமழை வந்திருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், போக்குவரத்து துறையினர் என அனைவரும் தயார் நிலையில் இருந்தார்கள்.

மழை அதிக அளவு பெய்யவில்லை என்றாலும் ஒரு சில இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு இதை சமாளித்து இருக்கிறது. இன்று காலை வரை தூய்மை பணியாளர்கள் எங்கும் பாதிப்பில்லாத வகையில் எல்லா இடங்களிலும் சுத்தம் செய்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. வானிலை நிலவரங்களை துல்லியமாக சொல்ல முடியவில்லை. எல்லோரும் ஏமாற்றுவது போல வானமும் ஏமாற்றி உள்ளது என்றார்.

மழை காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் ரவி பாராட்டு தெரிவித்தது குறித்தான கேள்விக்கு, ஆளுநருக்கு மனமாற்றம் வந்திருக்கிறது. தொடர்ந்து இப்படியே இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் அதை தான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

பாஜக அரசிடம் திமுக நெருக்கம் காட்டுவதாக செய்திகள் பரவுகிறதே என்ற கேள்விக்கு, "தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சரி. இந்தியாவில் மக்கள் ஆட்சி நடந்து கொண்டு வருகிறா அல்லது மன்னர் ஆட்சி நடைபெறுகிறா என தெரியவில்லை. அதை எதிர்த்து ராகுல் காந்தி பேசும் போது நாக்கை அறுப்போம் என கொலை மிரட்டல் விடுகிறார்கள் என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details