சென்னை:சென்னையை அடுத்த தாம்பரம் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் பரப்பரப்பாக காணப்படுவது வழக்கம். இந்நிலையில், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கருப்பு நிற கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் மேற்கூரை திறக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு ஆண் மற்றும் பெண் ஜோடியாக வெளியே வந்து கொஞ்சிக் கொண்டதுடன், ஆண் நபர் கையில் பீர் பாட்டிலை எடுத்து குடித்துக் கொண்டு ஜாலியாக செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், இந்த வீடியோ காட்சி காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, காரின் பதிவெண்ணைக் கொண்டு முகவரியைக் கைப்பற்றிய போலீசார், அந்த காரில் குடித்தவாறு பயணித்தவர் பெருங்குடியைச் சேர்ந்த சஞ்சய் (23) மற்றும் அவரது பெண் தோழி சேர்ந்து மது அருந்தியவாறு காரில் சென்றது தெரியவந்தது.