தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண்களும் ஜீவனாம்சம் கேட்கும் வகையில் சட்டம்! சட்ட வல்லுநர்கள் தரும் விளக்கம் என்ன? - LAWYER ON DOWRY ACT

வரதட்சணை தொடர்பான வழக்குகளில், ஆண்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளது? சட்ட சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் தரும் விளக்கத்தை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits- ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை:அனைத்து சமுதாயத்திலும் திருமணங்கள் நிச்சயிக்கப்படும் போது, பெண் வீட்டாரிடம் வரதட்சணை பெறுவது என்பது காலம் காலமாக எழுதப்படாத விதியாகவே உள்ளது. அவர் அவர்களின் நிலைக்கு ஏற்ப வரதட்சணை என்பது பெறுகின்றனர். வரதட்சணை வாங்காமல் திருமணம் நடைபெற்றால், ஏதோ? குறை உள்ளதால் வரதட்சணை வேண்டாம் என கூறுவதாக ஒரு கருத்தும், வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்வது சமுதாயத்தில் தாழ்வாக நினைத்துவிடுவார்கள் என்ற மாயை உருவாக்கி வரதட்சணை வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

1961ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரதட்சணை தடுப்பு சட்டத்தின் படி, இரு தரப்பிலும் கட்டாயப்படுத்தி வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் சட்டரீதியாக தடை செய்யப்பட்டது. சட்டத்தை மீறி வரதட்சணை வாங்கியது உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்கிறது.

பொதுவாக இதற்கான தண்டனை என்பது ஆண்களால் வாங்கப்படுகிறது என்பதால், தண்டனைகள் என்பது மணமகன் குடும்பத்துக்கே பாதிப்பாக அமைகிறது. கட்டாயப்படுத்தி வரதட்சணை வாங்கவில்லை என்றாலும் பெண் வீட்டார் புகார் அளித்தால் மணமகன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், வரதட்சணை தொடர்பான வழக்குகளில், ஆண்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளது? சட்ட சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் தரும் விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்:

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் (Credits- ETV Bharat Tamil Nadu)

உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்:திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் இருந்தால் மட்டுமே வரதட்சணை புகார்கள் அளிக்க முடியும். வரதட்சணையால் ஏற்படும் மரணங்களை ஐ.பி.சி 304A பிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர். கட்டாயப்படுத்தி வரதட்சணை பெற்றதாக வரும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் உரிய புகார்களுக்கு பின் கைது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அப்பாவி ஆண்களுக்கு எதிராக ஆயுதமாக்கப்படும் டவுரி சட்டம்..? 'நேரம் வந்தாச்சு'.. சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான மனு! - DOWRY LAW REVIEW

வரதட்சணை புகார்கள் பதிவு செய்யப்பட்டதும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் குடும்ப நல குழு விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். ஆனால், சட்டப்பணிகள் ஆணைய குழு அறிக்கை அளிக்காமல் விசாரணை செய்யப்படுகிறது.

மனைவி வரதட்சணை புகாரை தவறாக பயன்படுத்தி இருந்தால், கணவன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யலாம். மனைவியிடம் இருந்து இழப்பீடு கேட்கவும் சட்டம் அனுமதி அளிக்கிறது. ஐ.பி.சி 509ன் கீழ் தனக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றத்தை அனுகலாம். வரதட்சணை கொடுமை செய்யாத போது போலியாக புகார்கள் அளித்தால், கணவன் ஐ.பி.சி 191ன் படி மனைவி மீது வழக்கு தொடரலாம். மனைவி அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி வழக்கு தொடர்ந்தால், ஐ.பி.சி 120B-ன் கீழ் கணவன் நீதிமன்றத்தில் நிவாரணம் பெறலாம்.

ஆண்களுக்கும் ஜீவனாம்சம் :ஜீவனாம்சம் போன்ற விஷயங்களில் ஆண்களுக்கான பலன்கள் மற்றும் பாதகங்கள் என்னென்ன?திருமணமான பெண் தனது கணவரை பொருளாதார ரீதியாக சார்ந்து இருப்பதால், விவாகரத்துக்கு பின் சம்மந்தப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக ஆண் வழங்க சட்டம் வழிவகை செய்கிறது.

இருவருக்கும் குழந்தைகள் இருந்தால் அதன் படிப்பு, உணவு மற்றும் எதிர்காலத்துக்காக கட்டாயம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும். ஆனால், தற்போது இருபாலரும் வேலைக்கு செல்வதால் ஜீவனாம்சம் என்பது பெரும்பாலும் கேட்கப்படுவது இல்லை. மேலும், கணவன் பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details