தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவராகும் கனவு நிறைவேறாததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு.. தஞ்சையில் நிகழ்ந்த சோகம்! - Thanjavur Student Suicide - THANJAVUR STUDENT SUICIDE

Thanjavur Student Suicide: நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுக்கூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பு தொடர்பான கோப்புப்படம்
இறப்பு தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 10:23 AM IST

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செந்தில்குமார். இவரது மகன் தனுஷ் (வயது 20). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று மருத்துவராகும் கனவில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்துள்ளார். அந்த படிப்பு பிடிக்காததால் ஒரு மாதத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார்.

இதில் அவர் தேர்ச்சி பெறாததால் அவருடைய மருத்துவராகும் கனவு ஈடேறவில்லை. இதனையடுத்து மாணவரின் பெற்றோர் மீண்டும் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் தங்கள் மகனை சேர்ப்பதாக இருந்து வந்துள்ளனர். மருத்துவப்படிப்பு கனவாக உள்ள நிலையில், இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததாலும், பொறியியல் படிப்பு பிடிக்காததாலும் தனுஷ் கடுமையான விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தனுஷின் பெற்றோர் இருவரும் வீட்டில் இருந்து கூலி வேலைக்கு சென்று விட்டதை அடுத்து, வீட்டில் தனியாக இருந்த தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற தனுஷின் உறவினர், தனுஷை கண்டு சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து, தனுஷின் உடலை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

தற்கொலையை விடுக (Credits - ETV Bharat Tamil Nadu)

அங்கு தனுஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கூலி வேலைக்கு சென்ற தனுஷின் பெற்றோர் தங்கள் மகன் இறந்த தகவல் அறிந்து விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனையடுத்து தனுஷின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதுக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மருத்துவராகும் கனவு நிறைவேறாததால், மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆளில்லாத வீடுகள் தான் டார்கெட்.. வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பெண்கள்.. சத்தியமங்கலம் பகீர் சம்பவம்! - Sathyamangalam Robbery

ABOUT THE AUTHOR

...view details