நொடிக்கு நொடி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகளை அறிய:https://www.etvbharat.com/ta/!elections/lok-sabha-election-results-2024
திருநெல்வேலி: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை ஆறு சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட தொகுதியாக உள்ளது. இங்கு மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற வாக்கு பதிவின்போது 10 லட்சத்து 60 ஆயிரத்து 461 பேர் (64.10% ) மட்டுமே தங்கள் வாக்கினை செலுத்தியிருந்தனர்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு இவிஎம் மெஷின்கள் வாக்கு எண்ணிக்கை மையமான நெல்லை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மிஷின்கள் வைக்கப்பட்டிருந்த 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறையின் முன்பு கடந்த ஒன்றரை மாதமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கைக்காக ஸ்ட்ராங் ரூம் அறை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில், அம்பை சட்டமன்றத் தொகுதி வாக்குப்பெட்டிகள் உள்ள பகுதிக்கு முகவர்கள் செல்லும் வழியில் உள்ள வாசலின் பூட்டிற்கான சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வரும் சூழலில், அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
முன்னேற்பாடு:முன்னேற்பாடுகளை பொறுத்தவரை மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணும் பணிக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தலா 51 பணியாளர்கள் வீதம் மொத்தம் 306 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர் மொத்தம் 22 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது.