தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Rains: எண்ணூர் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்.. 2 நாட்களாக பொதுமக்கள் அவதி! - CHENNAI RAINS

சென்னை புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் 2 நாள்களாகியும் வெளியேறாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

எண்ணூர் பகுதி பொதுமக்கள்
எண்ணூர் பகுதி பொதுமக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 4:59 PM IST

சென்னை:தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

குறிப்பாக இராயபுரம், ராதாகிருஷ்ணன் நகர், கொருக்குபேட்டை, வண்ணாரப்பேட்டை, எண்ணூர், மாதவரம்,
திருவெற்றியூர் கனமழை கொட்டி தீர்த்தது. 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் கன மழை பெய்யும் என கூறப்பட்டாலும் மழை பெரிதாகப் பெய்யவில்லை.

பொதுமக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தேங்கிய மழைநீர்:சென்னை முதன்மையான சாலைகளில் மழை நீர் தேக்கம் இல்லை என்றபோதும் சென்னை புறநகர் பகுதிகளான எண்ணூர் வெற்றி விநாயகர் நகர் பகுதியில் மழை நீரானது சூழ்ந்துள்ளது. வீடுகளில் உள்ளேயும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து உள்ளதால் அப்பகுதிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக பணிக்கு செல்பவர்கள் கடைகளுக்கு செல்பவர்கள் என அனைவரும் அந்த மழை நீர் கலந்த கழிவு நீரில் இறங்கிக் கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது. இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அப்பகுதி மக்கள் கூறுகையில்,"வருடா வருடம் இதுபோன்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். அரசு இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

இதையும் படிங்க:"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்".. கேஸ் சிலிண்டர் டெலிவரிமேன்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!

மழை நின்று 2 நாள்களாகியும் இன்னும் வெளியேற்றப்படாமல் உள்ளது. மேலும் மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

மேலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் இருசக்கர வாகனம் மூலம் பணிக்கு செல்ல முடியாமல் பேருந்தில் சென்று வருகின்றோம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்த தேங்கி மழை வெள்ளத்தில் பூச்சிகள்,பாம்புகள் வருவதாகவும், பாதுகாப்பற்று இருப்பதாகக் கூறிய அவர்கள் நிரந்தர தீர்வு காணவேண்டும் வேண்டும் என தெரிவித்தனர். பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து இன்று வெற்றி விநாயகர் நகர் பகுதியில் தேங்கி மழை நீரை மழைநீர் வடிகால்வாய் மூலம் வெளியேற்றும் பணியை அரசு ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details