தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 8:57 PM IST

ETV Bharat / state

10 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு எழுதச் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டம்! - TN SSLC supplementary exam

10th Student Supplementary exam: 10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்கம் கோப்புப்படம்
பள்ளிக் கல்வி இயக்கம் கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து செயல்படுத்தும் 'தொடர்ந்து கற்போம்' என்ற திட்டத்தின் மூலம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களைக் கண்டறிந்து, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல், முதல் துணைத்தேர்வு நடைபெறும் நாள் (மே.13) வரை சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாடவாரியாக ஆசிரியர் வல்லுநர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM) மற்றும் வினாத்தாள், துணைத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்புப் பயிற்சி மையம் மாணவர்கள் முன்னதாக பயின்ற பள்ளியிலேயே நடைபெறும்.

மேலும், இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் பாடம் சார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, பயிற்சி வழங்கவும் மற்றும் சனிக்கிழமைகளில் வாராந்திரத் தேர்வு நடத்தவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இச்சிறப்பு பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் வாராந்திர தேர்வு மதிப்பெண்கள் கல்வி தகவல் மேலாண்மையின் (EMIS) மூலம் கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து மாணவர்களை ஊக்குவித்து, அவர்களைத் துணைத் தேர்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

மேலும், 14417 என்ற உதவி எண் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, உரிய வழிகாட்டுதலுடன் தொடர்ந்து மாணவர்களைச் சிறப்புப் பயிற்சி மையத்தில் கல்வி கற்பதையும், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கச் செய்து மற்றும் துணைத் தேர்வு எழுதும் வரை ஊக்குவிப்பதையும் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆவணங்களை திருடி வெளியிட்டதாக சேலம் பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details