கோயம்புத்தூர்:மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று (செப்.15) கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுபினர்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், கோவையில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்திருந்த தேமுதிக விஜயபிரபாகரன், அதிமுக அலுவலகம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுகவுடன் சேர்ந்து அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கி இன்றைக்கு சாதாரண ஏழை எளியவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்துள்ளது. அதேபோல சாமானியனும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சராக ஆகலாம் என்ற நிலைக்கு வித்திட்டவர் அண்ணா.