திருநெல்வேலி:இந்திய ரயில்வே துறையை சேர்ந்த ஐஆர்சிடிசி சார்பில் நெல்லையிலிருந்து புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்பயணம் அடுத்த ஜூன் 6ஆம் தேதி தேதி தொடங்கி 9 நாட்கள் காசி, திரிவேணி, கயா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இருப்பதாக ஐஆர்சிடிசியின் மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் பாசுதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்தியேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை (Bharat Gaurav Tourist Train) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரயிலில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகள் உள்ளன. இதில், ஐஆர்சிடிசி தென் மண்டலம் சார்பில் புண்ணிய தீர்த்த யாத்திரை(PUNYA THEERTHA YATHIRAI) என்ற பெயரில் சுற்றுலா பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து தொடங்கி கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம், கயா மற்றும் அயோத்தியா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.