மதுரை:முருகன் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்:அதன்படி, தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06099) தாம்பரத்தில் இருந்து நவம்பர் 6 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மறு மார்க்கத்தில் திருச்செந்தூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06100) திருச்செந்தூரில் இருந்து நவம்பர் 7 அன்று இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.