சென்னை:சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கி.மீ தொலைவுக்கு 4 ஆவது புதிய ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரையிலான ரயில் சேவை கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை நேரடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் வழித்தடங்களில் முக்கிய கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை நேரடி ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.