சென்னை: 17வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் பல்வேறு போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் அந்தப் போட்டிகளைக் காண ரசிகர்களுக்குச் சிறப்பு ரயில் சேவையைத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதற்கு முன் இரண்டு போட்டிகள் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடியுள்ளது.
சிஎஸ்கே - கேகேஆர் போட்டிக்காக ரசிகர்களுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மீதம் 4 போட்டிகள் இருப்பதால் கூடுதலாகச் சிறப்பு ரயில்களைத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 8ஆம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறும் சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ரசிகர்கள் வந்து செல்வதற்காகச் சிறப்பு ரயிலைத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் ஏப்ரல் 23, 28, மே 01 மற்றும் 24, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகளுக்குச் சிறப்புப் பயணிகள் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பயணிகள் ரயிலானது இரவு 10:40 மற்றும் 11.05 ஆகிய நேரங்களுக்கு வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு 11.15 மற்றும் 11.40 ஆகிய நேரங்களில் சிந்தாதிரிப்பேட்டை சென்றடையும். அதேபோல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 11.20 மணி மற்றும் 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு 12.05 மற்றும் 12.30 ஆகிய மணிக்கு வேளச்சேரியைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயிலானது பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், கோட்டூர்புரம், பசுமை வழிச் சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டக்கண்ணி அம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளதால் போட்டிகளைக் காணக் கூடுதலான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லஞ்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.. ஜோ மைக்கேல் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்! - Defamation Case Against YouTuber