சென்னை: நடிகர் விஜய் நாளை (ஆக.22) தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்து கொடியேற்றி வைக்கிறார். பின்னர், பனையூர் தலைமை அலுவலகத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஆதித்யா ஸ்ரீராம் சிட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும், அதில் நிர்வாகிகளிடையே விஜய் பேச உள்ளார் எனவும், இதற்காக அனுமதி கோரி தவெக சார்பில் காவல்துறையினருக்கு கடிதம் ஒன்றை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், அதே மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை காரணமாக கொண்டு, விஜயின் தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.