சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த 5ம் தேதி பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 16 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில், திருவேங்கடம் என்ற முக்கிய கைதியை ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர். மேலும், இந்த வழக்கில் முதலில் 11 பேர் கைது செய்தபோது அவர்களை போலீஸ் காலில் எடுத்து ஐந்து நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலு, திருமலை, அருள் ஆகிய மூவரையும் மீண்டும் போலீஸ் காலில் எடுத்து விசாரணை செய்ய செம்பியம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூன்று பேரையும் காவலில் எடுக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று வரை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.